இரவில் மட்டுமே திறந்திருக்கும் அதிசயக் கோவில்,தலையெழுத்தை மாற்றும் நேரக்கோவில், 11 நொடிகளில் காலச்சக்கரம் மாறும்!மதுரையில் அமைந்துள்ள காலதேவி அம்மன் கோவில் பற்றிய கட்டுரை...
பொதுவாக, அனைத்துக் கோயில்களும் அதிகாலையில் நடைதிறந்து இரவில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால், மதுரையில் உள்ள ஒரு கோயில் இரவில் மட்டுமே திறந்து பகலில் நடை சாத்தப்படும் என்பது அதிசயமான உண்மை ஆகும்..!
காலதேவி அம்மன் கோயில் சூரியன் மறைந்ததும் திறக்கப்பட்டு, மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு நடை சாத்தப்படுகிறது. இந்தக் கோயில் மதுரை மாவட்டம் சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. உலகிலேயே இரவு முழுவதும் திறந்திருக்கும் ஒரே கோயில் என்றால் அது இதுதான்!
காலதேவியின் காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,எனக்கு எது நல்லதோ அதைக் கொடு என வேண்டினால் போதும்.நம்முடைய நேரம் நல்ல நேரமாக மாறும். காலதேவியை வேண்டிக்கொண்டால் போதும் கவலைகள் தீரும், கஷ்டங்கள் மறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் என அனைத்தும் சூழ அமைந்துள்ளது காலதேவி அம்மன் சிலை. நேரத்திற்காகவே கட்டப்பட்டுள்ளது இந்த "காலதேவி அம்மன் கோவில்". காலச் சக்கரத்தை இயக்கும் தலைவியாக அருள்பாலிக்கும் இந்த அம்மனின் கடைக்கண் பார்வை பெற்று விட்டால், கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறி விடும். நேரத்தை மாற்றும் கோயில் என்பதால் நேரக்கோயில் என அழைக்கப்படுகிறது.
மனிதர்களுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் நிச்சயமாகக் கூர முடியாது. கால நேரத்தைப் பற்றியும், அடுத்தது இந்த பூமியில் என்ன நடக்கும் என்ற மர்மத்தையும், விஞ்ஞானிகளால் கூட கணிக்க முடியாது என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் நம்முடைய நேரத்தைப் பற்றியும், நம்முடைய எதிர்கால நேரத்தைப் பற்றியும் தெரிந்த ஒரு அம்மன் இருக்கிறாள் என்றால், அது இந்த ஸ்ரீ காலதேவி அம்மன் தான்.
தலையெழுத்தை மாற்றும் நேரக்கோவில்:
கால தேவி அம்மன் முன்பாக 11 நொடிகள் நின்று, மனமுருகி நாம் வேண்டிக் கொண்டால் நம்முடைய கெட்ட நேரங்கள் நீங்கி நல்ல நேரமாக மாறும் என்பது நம்பிக்கை ஆகும்.
இங்கு எண்கோண வடிவ கருவறை உள்ளது. விமானமும் எண்கோண வடிவில் செங்குத்தாக உள்ளது. காலசக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் காலதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள்.
காலையில் நடை திறந்து இரவில் சாத்துவது கோயில்களில் வழக்கம். இங்கு சூரியன் மறைந்த பின் மாலையில் தான் நடை திறக்கப்படும். இரவு முழுவதும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். காலதேவி என்ற பெயரில் வேறெங்கும் கோயில் இல்லாதது தனிச்சிறப்பு. அமாவாசை, பவுர்ணமி நாளில் யாகத்துடன் சிறப்பு பூஜையும் நடக்கும்.
நவகிரகங்கள் 27 நட்சத்திரங்கள்:
மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டியை அடுத்த எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ளது சிலார்பட்டி. இந்த கிராமத்தில்தான் உள்ளது காலதேவி கோவில். கோயிலில் கோபுரத்திலே "நேரமே உலகம்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. புராணங்களில் வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.
11 நொடிகளில் காலச்சக்கரம் மாறும்!
ஸ்ரீ கால தேவி இங்கு வரும் பக்தர்களின் காலத்தில் வீற்றிருந்து, கெட்ட நேரங்களை நீக்கி அருள்புரிகிறார். இந்த கோவிலில் ஒரு அபூர்வமான கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் அனைவரும் 11 நொடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நிற்கும் நேரத்தில் நமது கால சக்கரமானது சுழன்று நமக்கு நல்ல நேரத்தை தரும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. இந்த கோவிலில் கால தேவிக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. மற்ற தெய்வங்களின் சிலை எதுவும் இந்த கோவிலில் இல்லை.
பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது. கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும்.கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை ஆகும்.
கெட்ட நேரத்தை மாற்றும் அம்மன்:
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்.
எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை போக்க வேண்டும் என்று நினைத்தாலும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு, கால சக்கரத்தில் நின்று தங்களது வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறுகிறார் இந்த கோவிலை நிர்வகித்து வருபவர். காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும்போது, எனக்கு அதைகொடு, இதை கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல், "எனக்கு எது நல்லதோ அதைக் கொடு" என வேண்டினால் போதும். நல்லது நடக்கும் என்கிறார் குருஜி சுவாமி தாசன்.
கவலைகள் நீக்கும் காலதேவி:
ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள சுவாமிதான் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த கோவிலைக் கட்டி பிரதிஷ்டை செய்துள்ளார். கஷ்டங்களால் அவதிப்படுவோர்தான் இக்கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல்சொல்லி, அவர்களின் மனங்களில் நம்பிக்கையை விதைக்கிறோம். அது அவர்களுக்குள் மாற்றங்களை கொடுக்கிறது, என்கிறார் குருஜி சுவாமி தாசன்.
கோயில் கோபுரத்திலேயே 'நேரமே உலகம்' என்று பொறிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, ஒருவருடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவருடைய நேரம்தான் வழி வகுக்கிறது என்பதை சொல்கிறது இந்த வாசகம். புராணங்களில் காணக்கூடிய காலராத்திரியைத்தான் இந்தக் கோயிலில் கால தேவியாக வழிபடுகின்றனர். அவருடைய இயக்கத்தில்தான் 14 லோகங்களும், பஞ்சபூதங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் செயல்படுகின்றன என்று நம்புகின்றனர் மக்கள். இந்தக் கோயிலின் கருவறையும் விமானமும் எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இறங்க வேண்டும். டி.கல்லுப்பட்டியில் இருந்து ஆட்டோவிலும் போகலாம். சாதாரண நாட்களில் செல்வதைவிட பவுர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே இங்கு சிறப்பு ஆகும். "ஓம் ஸ்ரீ காலதேவியே போற்றி"!!!
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
إرسال تعليق