90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ் இன்றைய வாழ்கை முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் நன்மை தீமைகள் (90s Kids vs 2K Kids nowadays Life Methods and Habits)

       1.90ஸ் கிட்ஸ் Vs  2கே கிட்ஸ்

  • நம் குழந்தைப் பருவத்தில் பெரும் தாக்கத்தைத் தரக்கூடியவை நாம் வாழும் சூழல். சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஒப்பிடப்படுவது, 90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ்தான். இந்த இரு தரப்பின் வாழ்க்கைச் சூழலில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. நைன்ட்டீஸ் கிட்ஸ்களுக்கு கேபிள் டிவி என்று கூட சொல்லத் தெரியாது. அவர்கள் சன் டிவி என்பார்கள். ஆனால், 2கே கிட்ஸ்களுக்கு ஸ்மார்ட்ஃபோனில் ஓடிடி பார்க்கும் வசதி கிடைத்திருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் மிகப் பெரிய பாய்ச்சல் இந்த இரு பத்தாண்டுகளில்தான் அதிகம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் குழந்தைப் பருவத்தின் வாழ்க்கை முறை என்பதே முற்றிலும் மாறுபட்டது ஆகிவிட்டது. தெருக்களில் கில்லி, கிரிக்கெட், கோலி, கண்ணாமூச்சி, நொண்டி என விளையாடிக் கொண்டிருந்தவர்கள் நைன்ட்டீஸ் கிட்ஸ் என்றால், 2கே கிட்ஸ்களோ பெரும்பாலும் மொபைலில்தான் விளையாட்டுகளை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் தனியாகவே விளையாடுகிறார்கள்...


  2.இரு தரப்பும் பெற்றவையும் , இழந்தவையும் :-

  • அதேபோல், காலமும் வாழ்வியல் சூழலும் குழந்தைப் பருவத்தில் குணாதிசயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது, பிற்காலத்தில் சமூகத்தை அணுகும் முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். உதாரணமாக, 80ஸ், 90ஸ் கிட்ஸில் பலருக்கும் எதுவுமே கிடைத்துவிடாது என்பதால், ஒன்றின் மீதான வேல்யூ புரிந்து செயல்படுவர். ஆனால், இன்று 2கே கிட்ஸ் பலருக்கும் எல்லாமே எளிதில் கிடைத்து விடுவதனால் எதன் வேல்யூவும் தெரிவதில்லை. அதேநேரத்தில், ‘அந்தந்த நொடியில் வாழ்தல்என்பதை துளியும் பின்பற்றாத 80ஸ், 90ஸ் கிட்ஸ், எதிர்காலத்தை நினைத்து நினைத்தே எல்லாவற்றையும் கவனத்துடன் அணுகி, நிகழ்காலத்தை எஞ்சாய் செய்வதை மிஸ் பண்ணியிருப்பார்கள். அந்தத் தவறான அணுகுமுறையை 2கே கிட்ஸ் பெரும்பாலும் பின்பற்றுவது இல்லை என்பது பாசிட்டிவான அம்சம்தான். 2கே கிட்ஸ் பலரும் இந்த நொடியை எப்படி ரசித்து ருசித்து அனுபவித்து வாழ்வது என்பதில் கவனம் செலுத்துவதில் கில்லியாக இருக்கிறார்கள். இதேபோல், காதல் வாழ்க்கையிலும் 2கே கிட்ஸ் அணுகுமுறை என்பது வேற லெவலில் இருக்கிறது. 

  3. 2K KIDS இன்றைய நிலைமை : -      
  • பயமாக இருக்கிறது இன்றைய தலைமுறை வளர்கின்ற விதத்தை பார்த்தால்.. மாணவர் ஆசிரியரை மரியாதை இல்லாமல் நடத்தும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இது நம்ம தமிழ்நாட்டில் நடந்த சம்பவமா என்னும் அதிர்ந்து போனேன். இன்றைய தலைமுறை பிள்ளைகளிடம் இருக்கும் சில ஆபத்தான பழக்க வழக்கங்களை இங்கே குறிப்பிடுகிறேன்..
  • 2K கிட்ஸில் பலருக்கு,
  • பிடித்த சாப்பாடு - புரோட்டா, நூடுல்ஸ், பிட்ஸா
  • பிடித்த பொழுதுபோக்கு: ஆன் லைன் கேம், இன்ஸ்ட்டா கிராம் , வாட்சப், பேஸ் புக்கில் மணிக்கணக்கில் மூழ்கி கிடப்பது
  • பிடித்த பொருள் - செல்ஃபோன்
  • படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.
  • கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்.
  • பெற்றோர் உட்பட வயதில் மூத்தவர்கள் யாருக்குமே சரியாக மரியாதை தர தெரியவில்லை.
  • தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற அலட்சியமான மனநிலை.
  • கஷ்டப்படாமல் எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.
  • சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்.
  • நமது குடும்ப உறவுகள் பற்றி தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை.
  • ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் இவர்களை பொறுத்தவரை ஒன்றும் தெரியாத முட்டாள்கள்.
  • நமது வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல், குடும்ப உறவுகள், கடவுள் வழிபாடு, சடங்கு சம்பிரதாயங்கள் குறித்த அடிப்படை புரிதல்கள் கிடையாது.



 "This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"


Post a Comment

புதியது பழையவை